இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 03, 2019 12:35 PM

1. திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து புதுக்கோட்டையில் விசாரணை நடத்தினர்.

important tamil news headlines read here for more details

2. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில், வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

3. ஆபத்தான பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் நீங்கள் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று, பிரதமர் மோடியை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4. நெல்லையில் வயதான தம்பதிகளை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5. டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

6. தற்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை, ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்வதே என்னுடைய குறிக்கோள் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

7. விஜய் ஹசாரே டிராபியில் கேஎல் ராகுல் 81 ரன்னும், மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினர்.

8. பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

9. லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

10. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.40 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.24 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

11. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

Tags : #HEADLINES #TAMIL #TAMILNADU #KAMAL #CRICKET