கல்யாணமான 15 -வது நாள் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 30, 2019 04:47 PM

திருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman commits suicide within 15 days of her marriage

சிவகங்கை மாவட்டம் புதூர் அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்தவர் மலர். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பருக்கும் கடந்த 16 -ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து திருமணான சில நாட்களிலேயே தனது தந்தைக்கு போன் செய்த மலர், கணவர் தன்னுடைய நிறம், உடல் அமைப்பை பற்றி தரக்குறைவாக பேசி கொடுமைப்படுத்துவதாக சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் கல்லம்பட்டியில் உள்ள மணமகனின் வீட்டுக்கு சென்ற மலரின் தந்தை தங்கையா, மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மலர், கணவர் கொடுமை தாங்கமுடியால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மலரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். திருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SIVAGANGAI #WOMAN #SUICIDE #MARRIAGE