'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Sep 27, 2019 04:09 PM

வாக்குவாதம் செய்துகொண்டிருந்த தன் காதலியை பயமுறுத்த, திடீரென எதிர்திசையில் காரை ஓட்டிச் சென்ற இளைஞரின் செயலால், வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயினர்.

boyfriend what he did to scare his girlfriend after an argument

சீனாவில், ஜியாங்சு மாநிலத்தில், டாய்ஸோவ்-ஜென்ஜியாங் எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில், ஓர் இளைஞனும், அவரது காதலியும் சென்றுக் கொண்டிருந்தனர். காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியநிலையில், காதலியின் பேச்சை நிறுத்த இளைஞர் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் முடியாததால், காரின் வேகத்தை குறைத்த அந்த இளைஞர், திடீரென தான் வந்த திசையிலிருந்து யூ டர்ன் எடுத்து, எதிர்திசையில் திரும்பினார். அப்போது எதிரே வந்த கார்கள் மீது மோதும் விதமாக சென்றதால், காரிலிருந்து அந்தப் பெண் அலறினார். மேலும் அவர், ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?.. உனக்கு என்ன பைத்தியமா’ என்று இளைஞரை பார்த்து கத்த ஆரம்பித்தார். எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று எதிர்திசையில், அதிவேகமாக வந்ததால், மற்ற கார் வாகன ஓட்டிகள் பயந்துபோயினர்.

மேலும், திட்டியப்படியே தங்களது காரில் ஒதுங்கி சென்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கார்களை, அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற கார் கடந்து சென்றது. இதுகுறித்து ஜென்ஜியாங் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடைப்பெற்று வருவதால் இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ‘டெய்லி மெய்லில்’ வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags : #CHINA #VIDEO #BOYFRIEND #GIRLFRIEND