'இன்னும் கொஞ்சம் சேனல் அதிகமா பாருங்க... ஹாப்பியா இருங்க!'... கேபிள், டிடிஹெச் கட்டணங்களில் அதிரடி மாற்றம்!... ட்ராய் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 04, 2020 09:32 PM

கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை ட்ராய் வெளியிட்டுள்ளது.

trai slashes price for dth cable services and tv channels

ட்ராய் வெளியிட்டுள்ள புதிய கட்டண முறைகளின் கீழ் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, d2h அல்லது சன் டைரக்ட் ஆகிய டிடிஹெச் கனெக்‌ஷன் வைத்திருக்கும் பயனாளர்கள் இதன் மூலம் அதிகப்பயன் அடைந்துள்ளனர். மேலும், புதிய விதிமுறையின் அடிப்படையில் மாதம் 130 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் கிடைக்கும். முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு 20 கூடுதல் சேனல்களுக்கும், நீங்கள் 25 ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும். டிஷ் டிவி, d2h பயனாளர்கள் 200 சேனல்களுக்கு 153.40 ரூபாய் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 10 சேனல்களுக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணமாக செலுத்தவேண்டும்.

டாடா ஸ்கை பயனாளர்கள் முதல் 200 எஸ்டி சேனல்களுக்கு 153.40 ரூபாயும் கூடுதல் சேனல்களுக்கு மாதம் 188.80 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 2 எஸ்டி சேனல்கள் இணைந்ததுதான் ஒரு ஹெச்டி சேனலாக மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #CABLE #DTH #TRAI #PRICE