'ரிட்டர்ன்'லாம் அனுப்ப முடியாது...! 'பாவம்ல, அது இங்கயே இருக்கட்டும்...' பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்புவதில் புதிய சிக்கல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 04, 2020 10:52 AM

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்த பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் தற்போது மேலும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

Problem with returning cat from Chennai to China

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னர் ஒன்றில் விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பூனை எங்கிருந்து வந்ததோ அங்ககேயே திருப்பி அனுப்பிவிட சுகாதாரத்துறை அதிகாரிகள் துறைமுக நிர்வாகத்தை அறிவுறுத்தினர். ஆனால் பூனையை திருப்பி அனுப்பக் கூடாது என விலங்குகள் நல அமைப்பான பீட்டா துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும், செல்லப்பிராணிகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு வருவதில்லை என அமெரிக்க கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலை பீட்டா சுட்டிக்காட்டுகிறது. பூனையின் நிலை பரிதாபமாக உள்ளதாகவும், மேலும் 20 நாட்களாக உணவு, நீரின்றி கூண்டுக்குள் அடைந்துள்ள பூனை இறக்கவும் நேரிடலாம் என பீட்டா தெரிவித்துள்ளது.

Tags : #CORONAVIRUS