‘சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த பெண் சடலம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 31, 2019 10:52 PM

டெல்லியில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Man Kills Wife After She Says No To Prostitution in Delhi

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜலீல் ஷேக் (27) என்பவர் முதல் மனைவியை பிரிந்து பாத்திமா சர்தார் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர்கள் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையே ஜலீல் தனது மனைவி பாத்திமாவை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த  ஜலீல் அவரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாகர்பூரில் உள்ள சமூக கூடம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த உடலைக் கண்டெடுத்த போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பாத்திமா என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து உடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்த அவர்கள் தப்பிச் சென்ற ஜலீலையும் தேடி வந்துள்ளனர்.

தீவிர தேடுதலுக்குப் பிறகு மேற்கு வங்க ரயில் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்தை விற்பதற்காக சுற்றித் திரிந்த ஜலீலை போலீஸார் கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WESTBENGAL #DELHI #HUSBAND #WIFE #BRUTAL #MURDER #PROSTITUTION