‘உணவில் கலந்து கொடுத்த மருந்தால்’... ‘மனைவிகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘கணவன் செய்த அதிர்ச்சி செயல்’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 28, 2019 02:47 PM

கணவரின் தொல்லை தாங்காமல், உணவில் பேதி மருந்து கலந்து கொடுத்ததால், ஆத்திரமடைந்த கணவர் கொடூரமாக தாக்கியதில், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife dies as husband brutally beaten in tirupur

திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சாந்தி, திலகவதி என்று இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக கோழி கடை நடத்தி வருகிறார். ரமேஷ் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் இரண்டு மனைவிகளையும் அடித்து துன்புறுத்தியதாகத் தெரிகிறது. குடியை நிறுத்துமாறு அவர்கள் பலமுறை கூறியும் ரமேஷ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் குடித்து விட்டு வந்து சண்டை போட்டிருக்கிறார் ரமேஷ். இதனால் கோபமடைந்த இரண்டு மனைவிகளும், அவருக்கு தெரியாமல் உணவில் பேதி மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், இரண்டு மனைவிகளையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த முதல் மனைவி சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திலகவதி மயக்கமடைந்து இருக்கிறார்.

சாந்தி இறந்து விட்டதையடுத்து ரமேஷ், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று சரணடைந்தார். ரமேஷின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர்  ஆபத்தானநிலையில் இருந்த திலகவதியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags : #MURDERED #TIRUPUR #WIFE #HUSBAND #WIVES