‘அவ வலி, கதறல என்னால தாங்கிக்க முடியல’.. ‘ஐடி இளைஞரால் மனைவிக்கு நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 30, 2019 02:05 PM

புனேவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IT employee Kills Wife Before Committing Suicide In Pune

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஐடி துறையில் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணேஷ் அவருடைய சகோதரருக்கு, “நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்” என மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  அவருடைய சகோதரர் உடனடியாக கணேஷுடைய செல்ஃபோனுக்கு அழைக்க, நீண்ட நேரமாகியும் யாரும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் பதறிப்போன அவர் கணேஷின் வீட்டுக்கு விரைந்து வந்து பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகில் அவருடைய மனைவி விருஷாலி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்திலும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதைப் பார்த்து உறைந்துபோன அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து இருவருடைய சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார் அங்கிருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், “இறந்துபோன கணேஷின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளோம். அதில், கடந்த சில மாதங்களாக என்னுடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவளுடைய வலியையும், கதறல்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் அவளை மிகவும் நேசித்தேன் என எழுதியிருந்தது” எனக் கூறியுள்ளனர். மேலும் பேசிய அவர்கள், “கணேஷ் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளனர்.

Tags : #MAHARASHTRA #IT #HUSBAND #WIFE #BRUTAL #MURDER #SUICIDE