‘சிறுமி கையில் என்ன வைத்திருக்கிறார் எனத் தொடங்கிய ஏலத்தில்’.. ‘ரூ.177 கோடிக்கு விற்பனையான ஓவியம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 08, 2019 03:57 PM
ஜப்பான் ஓவியர் ஒருவர் வரைந்த பெண் குழந்தை ஒன்றின் கார்ட்டூன் ஓவியம் ஹாங்காங் ஏலத்தில் ரூ.177 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓவியங்கள் தொடர்பான ஏலத்தில் ஜப்பான் ஓவியக் கலைஞரான யோஷிடோமா நரா வரைந்த ஓவியம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெரிய கண்களுடன் முறைத்துப் பார்ப்பதுபோல நிற்கும் சிறுமி ஒருவரின் ஓவியமே அது. ‘Knife behind Back’ என்ற பெயரில் வரையப்பட்ட அந்த ஓவியத்துக்கான ஏலம், “அந்தச் சிறுமி தன் முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பார்? என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது.
ஏலம் தொடங்கி 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 177 கோடி) ஏலம் போயுள்ளது. 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதில் முதலில் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலைக்கு அந்த ஓவியம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.