‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 07, 2019 12:04 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்க முயன்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Four drown while taking selfie in Pambaru Dam Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான பிரபு மற்றும் நிவேதா, உறவுக்காரர்களான கனிதா, சினேகா, யுவராணி மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் நேற்று ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு பாம்பாறு அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதைப் பார்த்த அவர்கள் அணையின்  ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா, சினேகா, யுவராணி, நிவேதா மற்றும் சந்தோஷ் ஆகிய 5  பேரும் அணைக்குள் தவறி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு யுவராணியை மீட்டு கரை சேர்த்துள்ளார். அதற்குள் மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து புதுமணப்பெண் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KRISHNAGIRI #PAMBARU #DAM #SELFIE #SMARTPHONE #NEWLYWED #MARRIED #COUPLE #WOMAN #STUDENT #DEAD #HUSBAND #WIFE