‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 26, 2019 03:18 PM

பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை மாணவரின் உறவினர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Parents thrash teacher who assaulted Class 12 student

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு வந்த அந்த மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வகுப்பறையில் புகுந்து பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

ஆசிரியர் அடித்ததில் மாணவர் லேசான காயமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் குடும்பத்தினரால் தாக்கப்பட்ட ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த 2 தாக்குதல் சம்பவங்களும் பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து இரு தரப்பினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

பள்ளிக் கழிவறையில் மாணவர்கள் சேர்ந்து கூச்சலிட்டதற்காக ஆசிரியர் கண்டித்தபோது சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் பள்ளி நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் அதற்குள் மாணவருடைய உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரைத் தாக்கியதாகவும் பள்ளியின் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Tags : #GUJARAT #SURAT #SCHOOL #STUDENT #TEACHER #PARENTS #FAMILY #ATTACK #CCTV #VIDEO