டியூசன் டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த 7 ம் வகுப்பு மாணவன்..! மிரள வைத்த காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 17, 2019 09:21 PM

கடன் கொடுக்க மறுத்ததற்காக டியூசன் டீச்சரை மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 year old boy kills tuition teacher in Mumbai

மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். கணவரிடம் இருந்து பிரிந்து தனித்து வாழ்வதால் தனது செலவுக்காக பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி அதில் வரும் வருமானத்தை செலவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்த டியூசனில் 7 -ம் வகுப்பு மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவனின் தாயார் டியூசன் டீச்சரிடம் கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டியூசன் டீச்சர் பணம் இல்லை என மறுத்துள்ளார். இதனால் டியூசன் டீச்சர் மீது மாணவன் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவன் டியூசனுக்கு வந்துள்ளான். டியூசன் முடியும் சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டியூசன் டீச்சரை குத்திவிட்டு ஓடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டியூசன் டீச்சர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் டியூசன் டீச்சரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன்கொடுக்க மறுத்த டியூசன் டீச்சரை மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TUITION #TEACHER #STUDENT #KILLED #MUMBAI