‘3 போட்டில ஒன்னு கூட ஜெயிக்கல’.. கோபத்துல ரசிகர் செய்த செயல்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 11, 2019 01:56 PM

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை உடைக்கும் ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pakistan fan destroys Sarfaraz\'s hoarding after T20I series loss

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறமால் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றததை ஏற்படுத்தியது.

மேலும் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில், இரண்டாம்நிலை வீரர்கள் விளையாடிய போட்டியை வெல்ல முடியாததால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை ரசிகர் ஒருவர் ஆத்திரத்தில் உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

Tags : #PCB #PAKISTAN #FAN #PAKVSSL #HOARDING #T20I