'முதலில் எல்லார் முன்னாடியும் என்ன'.. 'இப்ப என் அம்மாவ'.. டீச்சரின் மேல் உள்ள ஆத்திரத்தில் 4-ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 19, 2019 12:38 PM
மும்பையில் உள்ள கோவாண்டி சிவாஜி நகரில், ஆயிஷா என்கிற டீச்சர், தனது கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், தாய் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரின் 4வது படிக்கும் 9 வயது மாணவனின் தாயார் வந்து கடன் கேட்டதாகவும், ஆனால் கடன் தர மறுத்த ஆயிஷா, கடன் தர மறுத்ததோடு, மாணவனின் தாயிடம் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவருக்குமான வாக்குவாதம் முற்றிப் போயுள்ளது.
இதனால் தனது தாய் வீட்டுக்கு சென்ற பிறகு ஆயிஷா டீச்சரின் வீட்டுக்கு வந்த மாணவன், ஆயிஷா பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, ஆயிஷாவிடம் சென்று திடீரென சரமாரியாக குத்திக் கொன்றுள்ளான். பின்னர் போலீஸ் விசாரணையில், தன்னை எல்லார் முன்பும் டீச்சர் திட்டியதாலும், தன் தாய்க்கு கடன் தரமறுத்து கடுமையாக பேசியதாலும் கொன்றதாகக் கூறியுள்ளான்.
இன்னொருபுறம், தன் தந்தையிடம் கூறும்போது, யாரோ முன்பின் தெரியாதவர்கள் தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து டீச்சரைக் கொல்ல சொன்னதாகவும், இல்லாவிட்டால் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளான். இதனால் குழம்பியுள்ள போலீஸார் மீண்டும் சிறுவனிடம் பொறுமையாக விசாரித்து வருகின்றனர்.
