‘விடுப்பு வேண்டி மாணவன் கூறிய அதிர்ச்சிக் காரணம்’.. அனுமதி அளித்த முதல்வரால்.. ‘வைரலாகும் லெட்டர்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 02, 2019 10:52 AM
கான்பூரில் தான் இறந்துவிட்டதாக கூறி விடுப்பு கேட்ட மாணவனுக்கு பள்ளி முதல்வர் விடுப்பு அளித்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு அரை நாள் விடுப்பு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தனது பாட்டி இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக மாணவன் தவறுதலாக தான் இறந்துவிட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதைக் கவனிக்காத பள்ளி முதல்வர் அதில் கையெழுத்திட்டு மாணவனுக்கு விடுப்பு அளித்துள்ளார். மாணவரின் இந்த விடுப்பு கடிதம் இணையத்தில் பரவியதை அடுத்து இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Tags : #UTTARPRADESH #KANPUR #SCHOOL #STUDENT #LEAVELETTER #SHOCKINGREASON