'5 வருஷ லவ்'... 'பேஸ்புக் லைவில் நடந்த கொடூரம்' ... 'லைவை பார்த்து கதறிய நண்பர்கள்' ... ஆடி போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > உலகம்5 வருடம் உருகி உருகிக் காதலித்து விட்டு, அதே பெண்ணை திருமணம் செய்த கணவனே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணத்தைக் கேட்டு காவல்துறையினரே அதிர்ந்து போனார்கள்.

பங்களாதேஷின் பராகிப்பூர் அடுத்த பெனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புகியான். இவருடைய மனைவி தகிமா அக்தர். இருவரும் 5 வருடங்கள் காதலித்தது பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும் இருக்கிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இந்த தம்பதியரின் வாழ்வில் திடீரென புயல் வீச தொடங்கியது. கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டைகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பேஸ்புக் லைவ் வந்த புகியான், ஒரு நபரால் தனது மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் போய்விட்டதாக கூறினார். அந்த ஒரு நபர் தனது குடும்பத்தையே அழித்து விட்டதாகக் கூறி, கீழே மயங்கிய நிலையில் கிடந்த மனைவியை, கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கினார். எதார்த்தமாக பேஸ்புக் லைவை பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர்கள், அந்த கொடூரத்தைப் பார்த்து உறைந்து போனார்கள். புகியான் மனைவியைத் தாக்கும் போது மயங்கிய நிலையில் கிடந்த அவரின் முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது.
இதையடுத்து தனது 8 வயது குழந்தையுடன் மற்றொரு வீடியோவை பதிவிட்ட அவர், ''எனது மனைவி தன்னையும், தனது குழந்தையையும் தவிக்க விட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து மீண்டும் என்னுடன் வந்து சேர்ந்து கொண்டார். ஆனால் அன்றிலிருந்து நான் எப்போது வேண்டுமானாலும் சென்று விடுவேன் என என்னை மிரட்டிக் கொண்டே இருந்தார். அந்த கொடுமையை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. இந்த கொலைக்கு நான் மட்டும் தான் காரணம். இப்போது என்னுடைய குழந்தையும் அனாதையாகப் போகிறது'' என உருக்கத்துடன் கூறினார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் புகியானை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து புகியான் கூறிய பதில், காவல்துறையினரை அதிரச் செய்தது. அதில், ''தான் டாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னுடைய மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
அந்த நபருடனான உறவைத் துண்டிக்குமாறு எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. அந்த சித்திரவதையை என்னால் தங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மனைவியைக் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்''. தாய் கொலை செய்யப்பட்டு, தற்போது தந்தையும் சிறைக்குச் செல்ல இருப்பதால் 8 வயது பெண் குழந்தை தற்போது அனாதையாகி உள்ளது.
