மரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 06, 2020 04:58 PM

திருமணமாகி 51 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த தம்பதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

Coronavirus US Married For 51 Years Couple Dies 6 Minutes Apart

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 நிமிட இடைவெளியில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 51 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த இந்த தம்பதியை அவர்களுடைய குடும்பத்தினர் பிரிக்க முடியாத ஜோடி என அழைக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள அவர்களுடைய மகன், "அவர்களுடைய இறப்பு துரதிருஷ்டவசமானது. மார்ச் பாதியில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்ந்த அவர்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு தந்தையின் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாயை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு பரிசோதனையில் அவர்களுடைய உறுப்புகள் செயலிழந்தது தெரியவந்ததால் அவர்களை நல்வாழ்வு கவனிப்பிற்கு மாற்ற முடிவு செய்து, இருவரும் ஒரே அறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் வசதியாக இருக்க வென்டிலேட்டர்கள் கழற்றப்பட்ட சில நிமிடங்களில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மக்கள் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து சமூகவிலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.