'தற்கொலை' என நினைத்தபோது... '5 வயது' மகன் கூறிய 'அதிர்ச்சி' தகவல்... 'கர்ப்பிணி' பெண்ணுக்கு நிகழ்ந்த 'கொடூரம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 09, 2020 09:09 PM

இந்தூரில் கர்ப்பிணி மனைவியை 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு அவருடைய கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MP Indore Husband Murders Pregnant Wife For Girlfriend

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தம்பதி அனுப் - வந்தனா திவாரி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் வந்தனா 2வது முறை கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை போலீசாருக்கு போன் செய்த அனுப் தன் மனைவி அப்பார்ட்மென்டின் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்  வந்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீஸ்  விசாரணையில், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று ஆத்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தன்மீது சுடுதண்ணீரை ஊற்றிவிட்டு வந்தனா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் அனுப் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கணவன் - மனைவிக்கு இடையேயான தகராறில் வந்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனுப் உடலில் சுடுதண்ணீரால் ஏற்பட்ட காயம் இருந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு போலீசார் விசாரித்தபோது, உன்னை கொன்றுவிடுவேன் என அப்பா அடிக்கடி அம்மாவை மிரட்டுவார் என வந்தனாவின் 5 வயது மகன் கூறியுள்ளார்.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த வந்தனாவின் குடும்பத்தினரும் அவரை திட்டமிட்டே அனுப் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர். இதுபற்றி வந்தனாவின் சகோதரர் போலீசாரிடம் கூறுகையில், "என் சகோதரியின் கணவருக்கும் அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த விஷயம் தெரிந்து என் சகோதரி அதுபற்றிக்  கேட்டதற்கு உன்னைக் கொலை செய்துவிடுவேன் என அனுப் மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில், எனக்கு போன் செய்த அனுப் அவளை அழைத்துச் செல்லவில்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். ஊரடங்கு முடிந்ததும் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன். அதற்குள் இப்படி செய்துவிட்டார்"  எனத் தெரிவித்துள்ளார். வந்தனா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது உறுதியானதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அனுப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.