‘தினமும் வந்த போன் கால்ஸ்’.. ‘ஆனாலும் சம்மதிக்கல’.. காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 26, 2019 01:14 PM

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl throws acid on boyfriend for refusing to marry her

ஆக்ராவுக்கு அருகில் உள்ள ஜீவங்கர் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் காதலன் மீது ஆசிட் வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார், ‘அப்பெண்ணும் எனது மகனும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அப்பெண்ணிடம் பேசுவதை என் மகன் நிறுத்திக்கொண்டான். ஆனால் தொடர்ந்து அப்பெண் திருமணம் செய்துகொள்ளுமாறு எனது மகனுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தினமும் போன் செய்து வந்தார். வியாழக்கிழமை காலையில் அவளது போனுக்கு என் மகன் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்றுகொண்டிருக்கும் போது அப்பெண் ஆசிட் வீசியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சினால கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிட் வீசிய பெண்ணை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #GIRL #ACID #BOYFRIEND #AGRA #MARRIAGE