'யெஸ்-ஆ நோ-வா?'.. 'என்னா ஒரு கான்ஃபிடண்ட்..'.. ட்ரெண்ட் ஆகும் ஃபாய்பிரண்ட் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Nov 10, 2019 04:36 PM
இங்கிலாந்து இளைஞர் ஒருவர் தனது காதலைச் சொல்ல வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டுள்ள நிகழ்வு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இங்கிலாந்தின் மேற்குப் பகுதியான கிளாவ்ஸ்டர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது தோழியை அழைத்துக்கொண்டு டாட்டூ கடைக்குச் சென்றிருக்கிறார். இங்கு எதுக்காக அழைத்து வந்தாய்? என்று கேட்ட தனது தோழியை வெளியில் வெயிட் பண்ணச் சொல்லிவிட்டு, டாட்டூ குத்தும் கலைஞரிடம் சென்றுள்ளார்.
அங்கு சென்று, தனது காதலை தனது தோழியிடம் வித்தியாசமாக வெளிப்படுத்த விரும்புவதாகவும் அதற்காக, தனது நெஞ்சில் ‘என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்றும், அதற்குக் கீழே இரண்டு பாக்ஸ் போட்டு ஆம், இல்லை என்கிற இரண்டு ஆப்ஷன்களும் இருக்குமாறு பச்சைக் குத்திக் கொண்டு வந்து தோழியிடம் காண்பித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அந்தத் தோழியும், ஆம் என்கிற ஆப்ஷனை தொட்டு வெட்கப்பட்டு சிரிக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞர் ஆம் என்கிற ஆப்ஷனில் ஹார்டினையும் பச்சை குத்திவைத்துள்ளார். அதன் பிறகே தோழியிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஒரு வேளை இல்லை என்று அந்த பெண் சொல்லியிருந்தால் என்ன ஆயிருக்கும்? என்று பலர் கேட்டதற்கு, தனது தோழி அப்படி சொல்ல மாட்டாங்கன்னு தெரியும் என்று புன்னகைக்கிறார்.