அடுத்தடுத்து கிரிக்கெட்டில் இருந்து 'விலகும்' பிரபல வீரர்கள்.. 'அதிர' வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 10, 2019 04:21 PM

கடந்த மாதம் பிரபல ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மனநல பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சிலகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். இந்தநிலையில் மீண்டும் ஒரு வீரர் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார்.

Nic Maddinson withdraws from Australia A squad due to mental health pr

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் துவங்குகிறது. ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம்பிடித்து இருந்த நிக் மேடின்சன் என்னும் வீரர் மன அழுத்தம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார். இதற்கு முன்னும் 2 முறைகள் மனநிலை பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து மேடின்சன் தற்காலிகமாக விலகி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு வீரர்களின் நலன் தான் முக்கியம். அவர்கள் தங்கள் பிரச்சினையை வெளிப்படையாக சொல்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவியை நாங்கள் வழங்குவோம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து தெரிவித்துள்ளது.

Tags : #CRICKET