'4 மாச பேஸ்புக் நண்பர்கள்'.. எதேச்சையான முதல் சந்திப்பு.. '4 மணி நேரத்தில் நடந்த சுவாரஸ்யம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 12, 2019 10:19 PM

வட மாநிலங்களில் துர்கா பூஜை அனைவராலும் பரவலாகக் கொண்டாடப்பட்டு வரும் நேரம், அந்த பூஜையில் கலந்துகொண்ட ஒரு இளம் நண்பர்களுக்கிடையே நடந்துள்ள விநோதம் பலரையும் கவர்ந்துள்ளது.

facebook friends couple marries when they met for first time

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப் கோஷல் மற்றும் பிரித்திமா பானர்ஜி ஆகிய இருவரும் பேஸ்புக்கில் கடந்த ஜூலை மாதம் அறிமுகமாகியுள்ளனர்.  சுதிப் கோஷல் ஒரு சர்வதேச ஆப்டிகல் லென்ஸ் நிறுவனத்தின் குவாலிட்டி பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், பேஸ்புக்கில் பிரித்திமா பானர்ஜியுடன் அறிமுகமாகியுள்ளார்.

ஆனால் இருவரின் உறவும் முகநூலைத் தாண்டி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடத்துக்கு நகருவதற்கு சில மாதங்களே தேவைப்பட்டன.  எப்படியோ இருவரும் திட்டமிடாமல்,  எதேச்சையாக அக்டோபர் மாதம் இரண்டாவது வார தொடக்கத்தில் துர்கா பூஜை ஒன்றில் கலந்துகொண்டனர்.

அதுவரை, தன் மனதுக்குள் இருந்த ஆசையை பிரித்திமா போலவே சுதிப் கோஷலும் தன் மனதுக்குள் அடக்கி வைத்திருந்திருக்கிறார். ஆனால் அந்த நிகழ்வை விட்டால் வாய்ப்பில்லை ராஜா என்று முடிவு செய்த, சுதிப், மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்திமா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனே க்ரீன் சிக்னல் காட்டியதோடு, இருவரும் காதலை பரிமாறிக்கொண்ட அடுத்த 4 மணி நேரத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பேஸ்புக்கில் பழகிய இருவர் நேரில் பார்த்த அடுத்த 4 மணிநேரத்தில் திருமணம் செய்துகொண்ட இந்த அரிய சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Tags : #MARRIAGE #LOVE #FACEBOOK