'ட்ரான்ஸ்ஃபர் ஆனதும் மறந்துட்டாரு.. நீங்கதான் உதவணும்'.. இளம் பெண்ணுக்காக கலெக்டர் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 14, 2019 11:01 AM

உத்தரப் பிரதேசத்தில், இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்ற முற்பட்ட துணை ஆட்சியருக்கு அதே பெண்ணுடன் அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

deputy collector marries a girl he loved in mid night

கோரக்பூரில் அண்மையில் நியமிக்கப்பட்ட துணை ஆட்சியரான தினேஷ்குமார், முன்னதாகவே திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்த தினேஷ் குமார், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே கோரக்பூரில் இருந்து குஷி நகருக்கு மாற்றம் செய்யப்பட்டதால், அங்கு சென்ற தினேஷ், தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண், கோரக்பூர் ஆட்சியர் அனில் குமார் என்பவரிடம் முறையிட்டுள்ளார்.

உடனே தினேஷ் குமாரை அழைத்து இதுபற்றி விசாரித்த அனில் குமாரிடம் தினேஷ் நடந்த யாவற்றையும் ஒப்புக்கொண்டதை அடுத்து, தினேஷ் குமாருக்கும், அவர் பழகி வந்த பெண்ணுக்கும் அவசர அவசரமாக நள்ளிரவில், திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்கு அனில் குமார் தலைமை தாங்கியுள்ளார்.

Tags : #MARRIAGE #LOVE