'குத்துயிரும் குலையுயுருமாய் கர்ப்பிணி பெண்'.. பேஸ்புக் காதலனின் முடிவு.. பதறவைத்த சோக சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 12, 2019 11:43 PM

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியில் தனது அண்ணனுடன் வசித்து வந்த திருமணமாகாத 31 வயது பள்ளி ஆசிரியை, சமூக வலைதளம் மூலம் நெல்லையைச் சேர்ந்த 32 வயதான விஜயசங்கர் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

man kills himself after attacked his facebook girlfriend

இந்த நட்பு காதலாக, காதல் சந்திப்பாக, சந்திப்பினால் ஆசிரியை 2 மாத கர்ப்பிணி பெண்ணாகியுள்ளார். அதன் பிறகு விஜய்சங்கரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, தனது வீட்டுக்கு அழைத்து தங்க வைத்து வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், விஜயசங்கரோ எல்லா லாபங்களையும் பெற்றுக்கொண்டு, அந்த பெண்ணிடம், ‘நீ என்ன போல எத்தனை பேரோட பேஸ்புக்ல பழகி வந்துட்டு இருக்க? உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ என்று கேட்டுள்ளார். இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த பெண் வெடித்து அழுது சண்டை போடத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயசங்கர், தன் காதலி தூங்கும்போது அதிகாலையில் கத்தி எடுத்து சரமாரியாக உடலெங்கும் குத்தியுள்ளார். அந்த நிலையிலும், அந்த அறையை விட்டு ஓடிவந்த அந்த பெண், விஜயசங்கரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு தன் அண்ணனின் உதவியுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது வழிமறித்து விசாரித்த போலீஸாரிடம் நடந்த உண்மைகளைச் சொன்னதன் பிறகு, சம்பவம் நடந்த ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று போலீஸார் பார்த்தபோது விஜயசங்கர், தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் நிலையில், விஜயசங்கரின் குடும்ப பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #VELLORE #LOVE #FACEBOOK #SAD #BIZARRE