'திமுதிமுவென வீடு புகுந்த கும்பல்'.. 'திரைப்பட பாணியில் காதல் தம்பதியருக்கு'.. 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 15, 2019 10:43 AM

நாமக்கல்லில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் அருகருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

intercaste married couple killed suspiciously in Namakkal

நாமக்கல் மாவட்டம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த விமல்ராஜூம் சேந்தமங்கலத்தை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த அனிதாவும் சாதிமாறி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு முன்பே, இவர்களின் சாதிமறுப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாகவும் ஆனாலும் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்ட இந்தத் தம்பதியர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தனர்.

அதன் பின்னர் நிம்மதியாக காமராஜர் நகரில், அனிதாவின் குடும்பத்தினருடன் அனிதாவும் விமல்ராஜூம் தங்களது 5 மாத குழந்தையுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அனிதா பலியானார்.  வெட்டுபட்ட விமல்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனிதாவின் தந்தை கருப்பசாமி சிகிச்சைக்காக போராடி வருகிறார்.

அனிதாவின் அண்ணன் அருணுக்கும் சேலத்தைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, நிக்கல்சன் அருணை வெட்ட ஆள் அனுப்பி, மாற்றி அனிதா-விமல்ராஜ் தம்பதியரை வெட்டியதாகவும்; அனிதாவின் சாதிமறுப்பு திருமணத்தில் உடன்பாடு இல்லாத அருணே கூலிப்படையை ஏவியிருக்கலாம் என்றும் வெவ்வேறு கோணங்களில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #LOVE #MARRIAGE