'மண்டைக்குள்ள சிப் பொருத்தி...' 'மூளைக்கு கனெக்ட்...' 'ஜாலியாக வீடியோ கேம் விளையாடும் குரங்கு...' எப்படி சாத்தியம்...? - எலான் மஸ்க் கூறும் வியக்க வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான எலான் மஸ்க் எப்போதும் ஒரு வித நவீன செய்முறைகளை செய்வதில் பெயர் போனவர்.
ஒருவிதத்தில் இது பல நவீன அப்டேட்ஸ்க்கு வழிவகுத்தாலும் இவரின் பல முயற்சிகளை கண்டு பலரும் எதிர்வினைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இவர் குரங்கின் மண்டை ஓட்டுக்குள் வொயர்லெஸ் சிப்பை பொருத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது எலான் மஸ்க்கின் நியுராலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம், ஒரு குரங்கின் மண்டை ஓட்டுக்குள் வொயர்லெஸ் சிப் ஒன்றை பொருத்தியுள்ளது. அதன்மூலம் குரங்கு மூளைக்குள்ளே வீடியோ கேம் விளையாடுவதாக கூறுகின்றனர்.
'குரங்கின் உடலுக்குள் கருவி எங்கே பொருத்தப்பட்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாது. அந்த குரங்கு ஒரு சந்தோஷமான குரங்கு. அதுமட்டுமல்லாது அந்த குரங்கு மைண்ட் PONG விளையாட்டும் அடுத்தவர்களுடன் விளையாடி வருகிறது.
மூளை மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும். FITBIT போல இந்த சிப்பை அவரவர் மண்டைக்குள் பொருத்தி மூளைக்கு கனெக்ட் செய்து கொள்ளலாம்' என கூறியுள்ளார் எலான்.