"இது என்னடா புது டெக்னிக்கா இருக்கு!"... "சேட்டை செய்த குரங்குகளை"... "வினோதமாக விரட்டிய கிராம மக்கள்!"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 30, 2020 05:41 PM

தொல்லை கொடுக்கும் குரங்குகளை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உடை அணிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

villagers try strategy to overcome monkey atrocities

உத்தர பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிவதாகவும், அவை தினமும் தொல்லை செய்வதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, வனத்துறையிடம் கிராம மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை போல் தெரிகிறது. இந்நிலையில், நாடக நடிகர்களிடம் கரடி வேட உடைகளை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள், அதை இருவருக்கு அணிவித்து பகல் நேரத்தில், ஊர் முழுவதும் உலாவ விட்டுள்ளனர்.

கரடி போல் வேடமிட்டிருந்த மனிதர்களைப் பார்த்த குரங்குகள், இப்போது சேட்டைகள் செய்வதில்லை என்றும், அவற்றின் தொல்லை குறைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #VILLAGE #MONKEY #BEARS