'வாங்க கேம் விளையாடலாம்...' 'ஆசைகாட்டி அழைத்து சென்று...' 'இரண்டு குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த...' 15 வயது சிறுவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு பதின்ம வயதை அடையாத குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுத்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகேயுள்ள மஸ்தான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆறு மற்றும் எட்டு வயதுள்ள இரு குழந்தைகளிடம் போனில் கேம் விளையாட தருவதாக ஆசையாக பேசி அழைத்து சென்று அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு செய்துள்ளான்.
இந்த விஷத்தை கேள்விப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பிடம் உடனே புகார் தெரிவித்தனர். உடனே காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டுப்போய் சேர்த்துள்ளனர். மேலும் இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
