செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போனில் பேசியபடி நடந்த சென்ற பெண்ணின் தலைமுடி கிரில் சிக்கன் இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தாய் மற்றும் உறவினர்களுடன் ஜவுளிக்கடைக்கு வந்துள்ளார். துணிகள் வாங்கிய பிறகு அவர்கள் பஸ் நிறுத்தம் அருகே வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்தபோது மாணவியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் செல்போனில் பேசியபடியே மாணவி தனியாக சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள சிக்கன் கடையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கன் இயந்திரத்தின் சுழலும் சக்கரத்தில் மாணவியின் முடி எதிர்பாராதவிதமாக் சிக்கிக்கொண்டது. அடுத்த நொடிகளில் மாணவியின் முழு முடியும் அதில் சிக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் மாணவி அலறியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் கிரில் கருவியின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து முடியை வெளியே எடுக்க முயன்று முடியாததால், முடியை வெட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் முழு முடியும் இயந்திரத்தில் சிக்கி இருந்ததால் மெக்கானிக்கை வரவழைத்து, இயந்திரத்தை கழற்றி மாணவியை மீட்டனர். இதில் மாணவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
