‘ஹாலிவுட்டுக்கு இணையாக’... கிளுகிளுப்பை கூட்டி, புகைச்சலை கிளப்பிய தம்பதிகளின் ‘ஜாலிக்கட்டு!’ - “2K கிட்ஸ் சாபம் இவங்கள சும்மாவே விடாது!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் வருடாவருடம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் பண்டிகைகளின் போது நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்துக்கே மொத்த திருவிழாவாக காணப்படும்.

இதே நேரத்தில் காணும்பொங்கல் பல ஊர்களில் பல விதமாக கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இந்த காணும்பொங்கல் வழக்கமாக கொண்டாடப்படும். இந்நிலையில் தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சற்றும் சளைக்காத ஒரு அபூர்வ விளையாட்டுப் போட்டியை கணவர் மற்றும் மனைவிமார்களுக்கிடையே நடத்தியுள்ளனர். இதனை பொங்கல் ஜாலிக்கட்டு விளையாட்டு போட்டிகள் என்று பலரும் இணையத்தில் வைரலாக பேசி வருகின்றனர்.
90s கிட்ஸ்களுக்கு மிகவும் பரிச்சயமான விளையாட்டுகளாக ஜென்டில்மேன் படங்களில் வரும் ஜலபுலஜங், சப்லிங், ஸ்பூன்லிங் போன்ற விளையாட்டுகள் பிரபலம். அவற்றுக்கு நிகரான விளையாட்டுப் போட்டிகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டுபடி, பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி போலவே ஒரு பக்கம் நாற்காலியில் கணவர்கள் அமர்ந்திருப்பார்கள். இன்னொரு முனையில் இருக்கும் இனிப்பை வாயில் கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிவந்து மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு தங்களுடைய வாயால் இனிப்பை ஊட்டும் விளையாட்டு தான் இந்த விளையாட்டு.
வயது வந்தோருக்கு மட்டுமான விளையாட்டு போல் தான் இது இருந்தாலும், சிறுவர்-சிறுமியர் என அனைவரும் முன்னிலையிலும் அமர்ந்து கூச்சமில்லாமல் கிராமத்து கணவன்மார்களும், மனைவிமார்களும் இந்த வில்லங்கமான விளையாட்டை விளையாடி உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தில் இனிப்பை எடுத்தோமா கணவன்மாருக்கு ஊட்டி விட்டோமா என இவர்கள் ஒரு பக்கம் தினுசாக தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றைப் பார்த்துக்கொண்டு இருந்த 2K கிட்ஸ்களின் மனநிலைதான் இருப்பதிலேயே சோகம்.
இதன் பின்னரும் இதற்கு இணையான இன்னொரு அடல்ட்ஸ் ஒன்லி விளையாட்டு அரங்கேறியது. அந்த விளையாட்டின் பெயர்தான் ஹார்ட் பிளாஸ்டர். ஒருமுனையில் மனைவி நிற்க, கையில் பலூனுடன் ஓடிவந்து அந்த பலூனை கணவன் மனைவி இருவரும் இதயங்களுக்கு இடையே வைத்து நெரித்து உடைத்தாக வேண்டும். பல போட்டியாளர்களுக்கு அவசரத்தால் பலூன்கள் உடைய மறுத்து நழுவிச் சென்ற சம்பவங்களும் நடந்தன.
இணையத்தில் வைரலாகும் இந்த வீர விளையாட்டுகள் தமிழ்நாட்டில் மக்கள் எந்த அளவுக்கு ரிலாக்சாக இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கத்தையும் அன்பையும் ஊராருக்கு பறைசாற்றும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
