'குடியிருப்பு' பகுதிக்குள் நுழைந்து 'குழந்தையை கடத்த' முயன்ற 'குரங்கு'!.. பட்டப்பகலில் அரங்கேறிய 'விநோத' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 05, 2020 11:12 AM

இந்தோனேசியாவில் குரங்கு ஒன்று குழந்தையை கடத்தி சென்ற காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

monkey tries to kidnap child from resident area

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் உள்ள குறுகலான தெரு ஒன்றில் குழந்தைகள் கூட்டமாக சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அவரகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை அவர்களின் பெற்றோர் தத்தம் குடியிருப்புகளில் இருந்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் அங்கு அரவம் இல்லாமல் பொறுமையாக அடிமேல் அடிவைத்து உள்ளே நுழைந்த குரங்கு ஒன்று திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை சட்டென இழுத்துக்கொண்டு சாலை வரை சென்றது.

அப்போது குரங்கின் கைப்பிடியில் இருந்து குழந்தை விலகி விட்டது. பின்னர் மீண்டும் குழந்தையைப் பிடித்து இழுத்த குரங்கு 5 அடிக்குமேல் தரதரவென்று குழந்தையை இழுத்துச் சென்றது . ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் குரங்கை விரட்ட எத்தனித்து கூச்சல் போட்டதையும், ஒரு பெரியவர் விரட்டிக்கொண்டே வந்ததையும் பார்த்த குரங்கு குழந்தை அப்படியே போட்டு விட்டு ஓடிச் சென்றது. குரங்கு தன்னை விட்டதும், அந்த குழந்தை தானகவே எழுந்து நடந்து வந்ததை இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்ய இந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பாதுகாப்பாக உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.