VIDEO: ‘அம்மா இருக்கேன் பயப்படாதே’!.. நெட்டிசன்களை உருக்கிய ‘தாய்பாசம்’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Selvakumar | Feb 14, 2020 12:26 PM

வீட்டுச்சுவரின் அந்தரத்தில் தவித்துக்கொண்டிருந்த குட்டியை தாய் குரங்கு பாதுகாப்பாக மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mother monkey saves cub on the wall video goes viral on social media

அந்த வீடியோவில் குட்டி குரங்கு ஒன்று வீட்டிச்சுவர் வழியாக மேலே ஏற முயன்றுள்ளது. ஆனால் பாதி வழியில் சுவற்றில் ஏற முடியாமல் தவித்து, சுவற்றில் உள்ள குழாய் ஒன்றை பிடித்தபடி அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளது.

இதனைப் பார்த்த தாய் குரங்கு வேகமாக ஒரு வீட்டின் மாடியில் இருந்து தாவி, லாவமாக குட்டியை தூக்கி தன் மார்பில் அணைத்து அங்கிருந்து தாவி செல்கிறது. குட்டியை காப்பாற்றிய தாய் குரங்கின் பாசத்தை பலரும் பாராட்டியும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Tags : #FACEBOOK #VIRA #MONKEY #MOTHERLOVE