‘கைப்புள்ள பேசாம தூங்குடா.. தூங்கு!’.. 'மாஸ்க்க முகத்துக்கு மாட்டாம'.. கண்ணுக்கு மாட்டிக்கொண்ட நபர்.. இதுக்கு பின்னாடி தான் இருக்கு ‘அந்த சோகக் கதை!’
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்மைதானத்துக்கு கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க சென்ற ரசிகர் ஒருவர் கால்பந்தாட்ட போட்டியை காண சென்ற ஸ்டேடியத்தில் அமர்ந்து மாஸ்க்கை முகத்திற்கு மாற்றுவதற்குப் பதிலாக கண்களை மறைத்து தூங்கிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலமாக நடக்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டி பந்தயம். அப்படித்தான் நேற்றையதினம் அர்செனல் மற்றும் பர்ன்லி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த போட்டியில் அர்செனல் அணி வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற கட்டாய நிலையில் ஆடிக்கொண்டு இருந்த போது இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம் எப்படியேனும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேட்கையில் அர்செனல் அணி ஆடிக் கொண்டிருந்த நேரம் அந்த அணியின் வீரர் எமரிக் சேம் சைடு கோல் அடித்து சற்றும் யாரும் எதிர்பாராத வண்ணம் துரதிஸ்டவசமாக எதிர் அணிக்கு முன்னிலை கொடுத்துவிட்டார். ஏற்கனவே கடைசி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் இந்த போட்டியை சற்றே பரபரப்புடனும் பதட்டத்துடனும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இனி நிச்சயமாக நம் அணி தோல்வி தான் அடையும் என்று கணித்து விட ரசிகர் ஒருவர் கண் கட்டிய பிறகு எதற்காக சூரிய நமஸ்காரம் என்பது போல் மூக்கினை மூடுவதற்காக கொண்டு வந்து இருந்த மாஸ்க்கை எடுத்து மூக்கு மற்றும் வாய் பகுதியை மூடுவதற்கு பதிலாக அவற்றை கண்களில் கட்டிக் கொண்டு, இந்த ஆட்டத்தை பார்ப்பதற்கு பதிலாக, எப்படியும் தோற்று விடுவோம் என்று தெரிந்து விட்ட அந்த ரசிகர் தூங்குவதை செய்யலாம் என்று நன்றாக தூங்க தொடங்கி விட்டார். அவரது இந்த செய்கை புகைப்படமாக பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.