பையன் ‘கேம்’ தான் விளையாடிட்டு இருக்கான்னு நெனச்சேன்.. எதர்ச்சையாக பார்த்த கிரெடிட் கார்டு ‘பில்’.. அதிர்ந்துபோன தாய்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிள் ஐபேடில் மகன் ஆடிய கேமால் 11 லட்சம் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வில்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெசிகா. இவரது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 6 மாதங்களாக ஆப்பிள் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது. இதை எதர்ச்சையாக ஒரு நாள் பார்த்த அவர், அதிர்ச்சியில் இதுதொடர்பாக வங்கியில் புகார் அளித்துள்ளார். அப்போது ஜெசிகாவின் 6 வயது மகன் ஜார்ஜ் தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சிறுவன் ஜார்ஜ், ஆப்பிள் ஐ பேடில் உள்ள சோனிக் போர்சஸ் (Sonic Forces) என்ற கேமை விளையாடியுள்ளான். அப்போது அந்த கேமில் வழங்கப்படும் காயின்ஸை பெறுவதற்காக தனது தாயின் கிரெடிட் கார்டை பல மாதங்களாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அந்த கேமிற்காக இதுவரை 11 லட்சம் ரூபாயை சிறுவன் ஜார்ஜ் செலவளித்துள்ளான். இந்த பணத்தை திருப்பி தர இயலாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் ஜெசிகா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

மற்ற செய்திகள்
