'சென்னையில நடக்குற மேட்ச்ல...' 'நான் இல்லாதது வருத்தமா தான் இருக்கு...' - நடராஜன் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇவ்வளவு நாள் இந்திய அணியில் இருந்து, தற்போது இருக்க முடியாதது வருத்தமாகத்தான் இருக்கிறது என இந்திய வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
![Nadarajan said definitely sad not to be in the Indian team Nadarajan said definitely sad not to be in the Indian team](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/nadarajan-said-definitely-sad-not-to-be-in-the-indian-team.jpg)
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதின் பயனாக ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். மேலும், ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து பார்மெட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜன் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த நடராஜன், 'கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது. இந்திய அணியுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.
ஆனால் கடந்த 6 மாதங்கள் குடும்பத்தை பிரிந்து இருந்ததும், முழுநேரமும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதால் எனக்கு இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது. இருந்தாலும் நடைபெறவிருக்கும் இங்கிலாந்து இந்தியா போட்டி சென்னையில் நடைபெறும் போது இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம்தான்' எனக் கூறியுள்ளார் நடராஜன்.
அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாட விரும்புவதாகவும், கடுமையான பயிற்சி தான் தன்னை ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட வைத்தது எனவும் அதை எப்போதும் செய்ய போவதாக நடராஜன் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)