திடீரென ‘குடியிருப்பு பகுதிக்குள்’ விழுந்து நொறுங்கிய ‘விமானம்’.. ‘27 பேர்’ பலியான பயங்கரம்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Nov 25, 2019 10:09 AM
காங்கோவில் சிறியரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கோமா நகரில் நேற்று தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் ஒன்று 19 பேருடன் புறப்பட்டுள்ளது. பேனி நகரை நோக்கி பயணித்த அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோமா நகரின் அருகாமையில் உள்ள மேப்பன்டோ என்ற இடத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே இருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் 17 பேர், விமான ஊழியர்கள் 2 பேர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
