‘சோகத்தில்’ முடிந்த ‘பிறந்தநாள்’ கொண்டாட்டம்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. இளைஞர்களுக்கு நடந்து முடிந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 23, 2019 08:29 PM

மதுரையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Madurai 3 Died in Accident While Returning From Birthday Party

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் குணா, பிரசன்னா ஆகியோருடன் வெளியே சென்று கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு நேற்று இரவு காரில் நண்பர்களுடன் தினேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆஸ்டின்பட்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று அவர்களுடைய கார்மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்து சம்பவ இடத்திலேயே அதில் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்த சம்பவம் இளைஞர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #MADURAI #BIRTHDAY #CAR #BUS #DEAD