நொடிப்பொழுதில் ‘அடுத்தடுத்து’ 4 வாகனங்கள் மோதி கோர விபத்து.. ‘கிண்டி ஆளுநர் மாளிகை அருகே நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 21, 2019 03:25 PM

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Chennai Accident 2 Injured In Bike Car Bus Collision Near Guindy

அடையாறில் இருந்து கிண்டி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இதனால் ஓட்டுநர் காரை திடீரென நிறுத்த, அதன் பின்னால் வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து அந்தக் கார் மீது மோதி நின்றுள்ளது.

இதையடுத்து நொடிப்பொழுதில் பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்று அதன் பின் பக்கத்தில் வேகமாக சொருகிக் கொண்டுள்ளது. 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : #ACCIDENT #CHENNAI #GUINDY #RAJBHAVAN #CAR #BIKE #MTC #BUS #COLLISION