'பைக் மீது மோதிய வேன்'!.. 'தூக்கிவீசப்பட்ட 3 பேர் '.. சென்னை ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 20, 2019 11:36 AM
சென்னையில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 4 பேர் ஒரே பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து சென்னை நோக்கி எதிர்புறமாக தவறான பாதையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை நோக்கி வேன் ஒன்று சென்றுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக பைக் மீது வேன் மோதியுள்ளது.
இதில் பைக்கில் சென்றவர்கள் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : #ACCIDENT #CHENNAI #ECR #BIKE #DIES