அசுர வேகத்தில் 'மோதிக்கொண்ட' பேருந்துகள்.. திருமண வீட்டினர் உட்பட.. 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Nov 22, 2019 08:15 PM

திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய மினி பஸ்சும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 killed in Bangladesh bus collision, police investigate

இன்று மதியம் 2 மணியளவில் வங்காளதேச நாட்டின் முஷிகஞ்ச் பகுதிக்கு உட்பட்ட மாவா-டாக்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக மினி பஸ்ஸில் திருமண வீட்டார் ரேணிகஞ்ச் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் எதிரே வந்த பேருந்து ஒன்று மினி பஸ் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு  வைத்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Tags : #ACCIDENT