கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்..! 1 வயது குழந்தை, 4 பெண்கள் உட்பட 8 பேர் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 22, 2019 12:34 PM

கார் ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eight killed as car falls in roadside pond in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் பிமிட்ரா மாவட்டத்தில் நேற்றிரவு 3 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 1 வயது குழந்தை உட்பட 8 பேர் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது மோகப்ஹடா என்ற பகுதியில் கார் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்துள்ளது. இதனால் அருகில் உள்ள ஏரியில் கார் விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மூழ்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #KILLED #CHHATTISGARH #POND #CAR