காருடன் ‘கொதிக்கும் நீருக்குள்’ விழுந்த பயங்கரம்.. ‘சாலைப் பள்ளத்தால் கணப்பொழுதில் நடந்த கோர விபத்து’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Nov 20, 2019 01:37 PM
ரஷ்யாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் காருடன் கொதிக்கும் நீருக்குள் விழுந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் பென்ஸா நகரத்தில் கடுமையான குளிர் காரணமாக பிரம்மாண்ட குழாய் வழியாக வீடுகளுக்கு கொதி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
கார் பள்ளத்தில் விழுந்த வேகத்தில் சாலைக்கு அடியில் இருந்த கொதி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நொடியில் காருடன் உள்ளே இருந்த 2 பேரும் கொதி நீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொதி நீர் அதிக வெப்பநிலையில் இருந்ததாலேயே சாலை உருகி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Tags : #ACCIDENT #CAR #HOT #WATER #RUSSIA
