'அவர காதலிச்ச நான் ஒரு முட்டாள்...' 'என்னால மன்னிக்கவே முடியாது...' மகன் பிறந்த நாள் முடிந்து நடந்த கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்விவாகரத்தான கணவர் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா முடிந்த பின் மனைவியை சராமாரியாக தாக்கிய கணவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் 24 வயதான கீஷா வாடிகன் என்னும் பெண் கடந்த இரு ஆண்டுகளுக்கு 2017-ம் ஆண்டு முகநூல் மூலம் ரியான் பிப்பியை சந்தித்துள்ளார். முகநூல் நட்பு நெருக்கமாகவே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலித்த சில நாட்களில் மிக மகிழ்ச்சியாக சென்றாலும் போக போக தான் ரியானின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
குடிபோதைக்கு அடிமையாக தொடங்கிய ரியான், போதையில் இருக்கும் போது கடுமையாக பேசவும், நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார் கீஷா. விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் போது தான் கிஷா கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது.
அதையடுத்து கீஷா ரியானை சமீபத்தில் பிரிந்திருந்தாலும், தங்களுடைய குழந்தையின் முதலாவது பிறந்தநாள் விழாவிற்கு ரியானையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பிறந்தநாள் விழாவும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விழா முடிந்து அனைவரும் விடை பெற்று சென்றபின், வீட்டில் தனியாக இருந்த கீஷாவை ரியான் கண்முன் தெரியாமல் தாக்கி, அறைந்து, பலமுறை முகத்தில் அடித்துள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட கிஷா 999 எண்ணிற்கு ரகசியமாக தொடர்பு கொண்டுள்ளார். பேச முடியவில்லை என்றாலும், அவருடைய அழைப்பு வந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரியான் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்
இதுகுறித்து கூறிய கீஷா, 'அவரை நம்பி காதலித்த நான் மிகவும் முட்டாள். எங்கள் மகனின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அவரை அழைத்தேன். எங்கள் மகனின் வாழ்க்கையில் அவர் ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பியிருந்தேன், ஆனால் இனி இல்லை. அவர் தனது முதல் பிறந்தநாளின் நினைவை அழித்துவிட்டார், அது என்னால் மன்னிக்க முடியாத ஒன்று' என மனமுடைந்து கூறினார்.
