‘எட்டு மாத கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தை’... ‘700 கிலோ மீட்டர் தூரத்தை’... ‘நெஞ்சை உருக்கும் சோகம்’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 14, 2020 02:12 PM

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வையும் புரட்டி போட்டுள்ள நிலையில், புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் சோகக் கதை குறித்த செய்தித் தொகுப்பு இது.

Man Wheels Pregnant Wife, Child On Makeshift Cart For 700 km

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ராமு என்பவர், ஹைதராபாத்தில் தங்கி கூலி வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி தன்வந்தா 8 மாத கர்ப்பிணி. இவர்களுக்கு அனுராகினி என்ற கைக்குழந்தையும். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், உணவு இன்றி, கையில் காசும் இல்லாமல் தவித்த இவர், தனது குடும்பத்துடன் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல திட்டமிட்டார். 

தன் மகளை தோளில் சுமந்துகொண்டு கர்ப்பிணி மனைவியோடு சில கிலோ மீட்டர் தூரம் உணவுகூட கிடைக்காமல் நடந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பெண் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு நடக்க முடியாது என்பதை உணர்ந்த ராமு செய்வதறியாது திகைத்து நின்றார். அப்பொழுது அவர்கள் சென்ற காட்டுவழிப் பாதையில் அவருக்கு ஒரு யோசனை ஒன்று கிடைத்துள்ளது. அந்த காட்டில் கிடைத்த குச்சிகளையும் மரப் பலகைகளையும் வைத்து கைகளால் இழுத்துச் செல்லக்கூடிய மர தள்ளுவண்டி ஒன்றை அவரே தயார் செய்து இருக்கிறார்.

பின்னர் அதில் அவர் கர்ப்பிணி மனைவியும் அந்தச் சின்னப் பெண் குழந்தையையும் வைத்து இழுத்து சென்றார். வழியில் உணவுக் கூட சரியாக சாப்பிடாமல், இப்படி இழுத்துக்கொண்டே சுமார் 700 கிலோ மீட்டரை ராமுவும் அவரது குடும்பத்தினரும் கடந்து உள்ளனர். ஒருவழியாக நேற்று இரவு அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு அருகில், மகாராஷ்டிராவின் எல்லையை அடைந்த பொழுது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ராமு தனக்கு நேர்ந்த சம்பவங்களை பற்றி கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களுக்கு உண்ண உணவும், அவரது குழந்தைக்கு காலணிகளும் கொடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, ஒரு வாகனம் ஏற்பாடு செய்து பத்திரமாக சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ராமுவும் அவரது குடும்பத்தினரும் தள்ளுவண்டி மூலம் 700 கிலோமீட்டர் பயணித்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல், டெல்லியிருந்து. ராஜஸ்தானிற்கு சுமார் 40 இளைஞர்கள், குற்றவாளிகள் போல் பார்க்கப்படுவதால், பகலில் மறைந்தும், இரவில் நடந்தும் 700 -க்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை கடந்த சென்ற சோகம் நிகழ்ந்துள்ளது.