‘யார் வீட்ல தங்குறது?’.. ஊரடங்கால் 2 கல்யாணம் செய்தவருக்கு வந்த ‘சோதனை’.. சண்ட போட்ட ‘மனைவிகள்’.. கணவர் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 11, 2020 07:44 AM

ஊரடங்கு உத்தரவால் இரண்டு மனைவிகளை உடைய ஒருவர் எந்த மனைவியின் வீட்டில் தங்குவது என்ற வித்தியாசமான பிரச்சனை எழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Husband of two wives confused on where he wants to go during lockdown

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆயத்த ஆடை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.  இதனை அடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் அவர் கடந்த 2019ம் ஆண்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

வேலை விஷயமாக வெளியே செல்வதாக கூறிவிட்டு முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது மனைவியின் தங்கி வந்துள்ளார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு எப்படியோ தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முதல் மனைவி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த நபர் இரண்டு மனைவிகளின் பெற்றோரிடம் பேசியுள்ளார். அதில், நான் தொழிற்சாலை நடத்தி வருகிறேன். போலீசார் என்னை கைது செய்தால் தொழில் பாதிக்கும். நம் குடும்பத்துக்குதான் அவமானம் என கூறியுள்ளார். இதனால் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் ஒருவாரம் என தங்குவதற்கு அவர்களது குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் முடிந்துவிட்டது உடனே தனது வீட்டுக்கு வரும்படி முதல் மனைவி கூறியுள்ளார். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியே வரமுடியவில்லை என கணவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ஊரடங்கால் முதல் மனைவியின் வீட்டுக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊரடங்கு முடிந்த பின் தங்களது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இரண்டு மனைவிகளும் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த நபர் நிலைமையை சமாளிக்க ஒரு முடிவெடித்துள்ளார். அதாவது ஊரடங்கு முடியும் வரை தனது நண்பர் ஒருவர் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார். இதனால் இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு சுமூக தீர்வு கிடைத்துள்ளது.