'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 27, 2020 05:13 PM

ஆன்லைன் விளையாட்டில் மனைவியிடம் தோற்ற கணவர் அவரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat Man Breaks Wifes Spine After She Wins In Online Ludo Game

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே இருப்பதால் பலரும் திரைப்படம் பார்ப்பது, ஆன்லைனில் கேம் விளையாடுவது என பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரிடம் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு யோசனை சொல்லியுள்ளார்.

அதன்படி கணவன், மனைவி இருவரும் லூடோ எனும் ஆன்லைன் கேமை விளையாடியுள்ளனர். அப்போது விளையாட்டின் 3 சுற்றுகளிலும் மனைவியே ஜெயித்ததால் ஆத்திரமடைந்த கணவர் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கணவருக்கு கோபத்தை கட்டுப்படுத்தும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.