கொரோனா நோயாளிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஒரு மெசேஜ்.. மன்னிப்பு கேட்ட நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 19, 2020 03:16 PM

சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு தவறுதலாக அனுப்பிய ஒரு குறுஞ்செய்திக்காக அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

Singapore apologised to 357 COVID19 patients for error text message

சிங்கப்பூரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய நாடான சிங்கப்பூரில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தவறுதலாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

அதில் கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனையில் மறுபடியும் பாசிட்டீவ் வந்ததாக 357 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது. இது தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முயன்றபோது, ஏற்பட்ட கோளாறு காரணமாக தவறுதலாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் நோயாளிகள் பதற்றம், அச்சம் ஏற்பட தாங்கள் காரணமாகிவிட்டதாக கூறி அந்நாட்டு அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.