“ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 26, 2020 08:30 AM

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த கணவர் ஒருவர் தன் மனைவிக்கு இறுதியாகப் பேசி வைத்துவிட்டுச் சென்ற ஆடியோ பதிவு உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

man dead due to corona left heartbreaking audio to wife

32 வயதான ஜொனாதன் டான்பரி  என்பவர் கடந்த மார்ச் 25ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக தன்னுடைய வாழ்க்கையை வென்டிலேட்டரில் கழித்துள்ள இவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவர் இறப்பதற்கு முன் கடைசியாக தனது மனைவி கேட்டி கொயல்ஹோ மற்றும் குழந்தைகள் பிராட்டின், பென்னி உள்ளிட்டவர்களுக்காக பேசி பதிவு செய்துவைத்திருந்த ஆடியோ உருக வைத்துள்ளது. அதில், “கேட்டி, ஐ லவ் யூ. நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை எனக்காக நீ அளித்தாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உனக்கு கணவனாகவும், பிராட்டின் மற்றும் பென்னியின் தந்தையாகவும் இருப்பதில் எனக்கு பெருமை. நான் சந்தித்த மிகவும் அன்பான மற்றும் அழகான பெண்ணான நீ உண்மையில் அற்புதமானவள். நீ நம் குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் இருக்கிறாய்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.  மேலும், அந்த ஆடியோ பதிவில், “பிராட்டின் உனக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீ அற்புதமான விஷயங்களை செய்து வருகிறாய். பென்னி, அவள் ஒரு இளவரசி. கேட்டி, உன்னையும் குழந்தைகளையும் விரும்பும் ஒரு நபரை சந்தித்தால் நீ பின்வாங்க வேண்டாம். உங்களுக்காக நான் அதையும்  விரும்புகிறேன் என நினைவில் வைத்துக்கொள். எதுவாக இருந்தாலும் எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.‌

இது பற்றிப் பேசிய கேட்டி, “நான் ஐசியுவில் அமர்ந்து அழுதபடி என் கணவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்று கதறிக் கொண்டு இருந்தேன். அப்போது தான் அவருடைய போனை என்னிடம் தந்தார்கள். அதில்தான் அவர் பேசிய இந்த உருக்கமான ஆடியோ குறிப்புகள் இருந்தன. ஒரு மாதத்துக்கு மேல் அவர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதும் கூட அவருக்கு என் மீதும் குழந்தைகள் மீதும் கவனம் இருந்துள்ளது!” என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.