'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது கணவரின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயதுடைய ஒரு நபருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த மே 11ம் தேதி, மாலையில் கணவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சுவாசக்கோளாறு மற்றும் இதயப் பிரச்னையால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மனைவி கொரோனா சிகிச்சையில் இருக்கிறார். மகள் குஜராத்திலும், உறவினர்கள் வாரணாசியிலும் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர்களால் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலேயே உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த பின்னரும் கணவரின் முகத்தை காண முடியாமல் தவித்த மனைவி இறுதிச் சடங்கை வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் விட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
