"போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 27, 2020 08:45 PM

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வைரஸிற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர்.

60 Doctors from India released a new video for People

இந்த நெருக்கடி சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுதியான நேரம் அதிக பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். மேலும் சிலர்,  ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மக்களிடையே சற்று பதற்றம் தணிந்து மகிழ்ச்சியுடன் நம்பிக்கையளிக்க வேண்டி நாடெங்கும் உள்ள அறுபது மருத்துவர்கள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மும்பை, புனே, நாக்பூர், கொச்சி, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள மருத்துவர்கள் இணைந்து நடனமாடி, குதூகலமாகும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.